சுடச்சுட

  

  தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா கோரி ஆர்எஸ்எஸ் கையெழுத்து இயக்கம்

  By DIN  |   Published on : 09th April 2017 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திபெர் பெளத்த மதத் துறவி தலாய் லாமாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளதாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் லூந்துப் சோஸாங் கூறியதாவது:
  தயால் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் அவர் எங்கள் மாவட்டத்துக்கு வருகை தந்த முதல் நாளான வியாழக்கிழமை (ஏப். 6) இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இதுவரை 5,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 25,000 கையெழுத்துகளைப் பெற்ற பிறகு, இந்த கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிப்போம்.
  இந்திய மண்ணின் மைந்தன் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் தலாய் லாமா, இந்தியாவில் மிக நீண்டகால விருந்தினர் ஆவார்.
  அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும், ஏற்கெனவே நோபல் பரிசு பெற்றுள்ள அவருக்கு பாரத ரத்னா வழங்கினால், அது சர்வதேச அரங்கில் நமது நிலைப்பாட்டை விளக்குவதாகவும் அமையும் என்றார் லூந்துப் சோஸாங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai