சுடச்சுட

    
    pranabmukherjee

    ""தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் தேவை'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
    இந்நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
    நமது தேர்தல் முறையில், 100க்கு 51 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிக்கு நிகராக, 51 இடங்களுக்குக் குறைவாக வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் உரிமைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கின்றன. ஆனால், அவர்களுக்கு எந்தப் பொறுப்புகளும் கிடையாது.
    இந்தக் குறைபாடுகளைக் களைவதற்கு தேர்தல் நடைமுறைகளை பாரபட்சமின்றி ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
    இதை அறிந்துதான், தேர்தலின்போது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் சரியான நேரத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
    எம்.பி.க்களின் எண்ணிக்கை: தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில், கடந்த 1976-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.
    இதனிடையே, அதே உறுப்பினர்களின் எண்ணிக்கையை, வரும் 2026-ஆம் ஆண்டு வரை நீட்டித்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
    1971-க்குப் பிறகு நாட்டின் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டபோதிலும், அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்பவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
    128 கோடி மக்களின் பிரதிநிதிகளாக, 543 உறுப்பினர்களை 80 கோடி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
    எனவே, மக்களின் எண்ணங்கள் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் பிரணாப் முகர்ஜி.

    முதலீடாக வேட்பாளர்கள் நினைக்கக் கூடாது

    உச்ச நீதிமன்றத்தின் 2-ஆவது மூத்த நீதிபதியான தீபக் மிஸ்ரா பேசியபோது, தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ""அதிகாரத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு தேர்தல்களில் இடம் கொடுக்கக் கூடாது; அதேபோல், தேர்தலில் போட்டியிடுவதை முதலீடாக வேட்பாளர்கள் நினைக்கக் கூடாது.
    எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுக்கம், நன்னடத்தை நெறி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai