சுடச்சுட

  

  பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  By DIN  |   Published on : 09th April 2017 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயங்கரவாதத்துக்கு ஆதரவு, ஊக்கம் மற்றும் நிதியளிக்கும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியாவும், வங்கதேசமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
  இந்தியா வந்துள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  பயங்கரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் என்று மோடியும், ஹசீனாவும் கேட்டுக் கொண்டனர்.
  அதேபோல் பயங்கரவாதிகளை தியாகிகள் என்று போற்றிப் புகழக்கூடாது என்றும் வலியுறுத்தினர். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான தீர்மானத்தை ஐ.நா.சபை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
  பயங்கரவாதிகளை ஒழிப்பது, பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவது ஆகியவை மட்டுமின்றி, பயங்கரவாதத்துக்கு ஊக்கம், ஆதரவு, நிதி ஆகியவற்றை வழங்கி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  இந்தியாவிலும் வங்கதேசத்திலும் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை மோடியும், ஹசீனாவும் கண்டித்தனர். பயங்கரவாதப் பரவலைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர் என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai