சுடச்சுட

  

  சென்னை: ஜெர்மனிக்குச் செல்வதற்காக போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
   இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
   கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த சஜிபால் (43), அவரது மனைவி ஷைனி சஜிபால் ஆகியோர் ஜெர்மன் நாட்டிற்கு செல்ல விசா பெறுவதற்காக சான்றிதழ்கள்,  ஆவணங்களுடன் சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டின் துணை தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.  
   அவற்றை தூதரக அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. இது குறித்து சென்னையிலுள்ள ஜெர்மன் தூதரக அதிகாரி லூகாஸ் கர்சர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் ஜெர்மனி  தூதரகத்திற்கு சென்று அங்கிருந்த தம்பதிகள் சஜிபால், அவரது மனைவியை விசாரணை செய்தனர்.
   விசாரணையில் கேரள தம்பதி சமர்ப்பித்த ஆவணங்களில் எர்ணாகுளத்தில் உள்ள கடல் உணவு ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணிபுரிந்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து
  போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜெர்மனிக்குச் செல்ல விசா பெற முயன்ற சஜிபால் (43), ஷைனி சஜிபால் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை (ஏப்.8) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தம்பதிகள் விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai