சுடச்சுட

    

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    இதுதொடர்பாக, போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: இம்பாலை அடுத்த லாங்கோல் கேம் கிராமத்தில் அதிரடிப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஜீலியான்கிரோங் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    அவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதைத் தொடர்ந்து, அவர் லாம்பெல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai