சுடச்சுட

    

    அதிக பணம் திருப்பித் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் ரூ.3,700 கோடி மோசடி செய்த வழக்கில், நொய்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவன இயக்குநர் சுனில் மித்தலை போலீஸார் காஜியாபாதில் கைது செய்தனர்.
    குறைந்த அளவில் முதலீடு செய்து, சமூக வலைதளங்களில் "லைக்' செய்வது போன்ற சிறு சிறு செயல்களின் மூலம் கூட பெருந்தொகை ஈட்டலாம் என்று ஆசை காட்டி, 6.5 லட்சம் பேரை ஏமாற்றிய வழக்கில் தனியார் நிறுவன உரிமையாளர் அனுபவ் மித்தல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அனுபம் மிட்டலின் மனைவி ஆயுஷி தலைமறைவாக உள்ளார்.
    இந்த நிலையில், முக்கியக் குற்றவாளியான அனுபம் மித்தலின் தந்தை சுனில் மித்தலை காஜியாபாதில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai