சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானவை: தேர்தல் ஆணையம் உறுதி

  By DIN  |   Published on : 09th April 2017 07:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vote-machine

  புதுதில்லி: தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று அதனை உற்பத்தி செய்தவர்களால் கூட சேதப்படுத்த முடியாது எனவும் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

  இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
  கடந்த 2006-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எம்1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனைத்திலும் தேவையான நுட்பமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதனை யாரும் எளிதாக ஹாக் செய்ய முடியாது எனக் கூறியுள்ளது.

  மேலும், 2006க்கு பின் 2012 வரை தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில், கூடுதலாக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கூடுதல் வசதிகள் மூலம் சந்தேகம் ஏற்படும் வகையில் பொத்தான்கள் அழுத்தப்படுவது கண்டுபிடிக்க முடியும். இந்த இயந்திரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியாது.

  இயந்திரங்கள் மட்டும் தனியாக செயல்படுபவை. எந்த இணையதள சேவை அல்லது நெட்வொர்க் மூலம் இணைக்கப்படாதவை என்றும் இயந்திரங்கதள் தனித்து தனியாக செயல்படுபவை. இதனை ரிமோட் மூலம் இயந்திரத்தை யாரும் இயக்கவோ, ஹாக்க செய்யவோ வாய்ப்பு கிடையாது. சேதப்படுத்தவும் முடியாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இயந்திரங்களை உற்பத்தியாளர்கள் சேதப்படுத்தலாம் என கூறப்படுபவை பொய்யானது. இதற்கு வாய்ப்பு கிடையாது. இயந்திரங்கள் அனைத்தும் இசிஐஎல் மற்றும் பெல் நிறுவனங்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு தயாரித்தவை. அவை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உற்பத்தியாளர்களுக்கு யார் வேட்பாளர், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள், எப்போது போட்டியிடுவார்கள், வேட்பாளர்களின் பெயர் எந்த வரிசையில் இருக்கும் என்ற தகவல் தெரிய வாய்ப்பில்லை தெரியாது. இதனால், அவர்களால் அதில் முறைகேடு செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார். பஞ்சாப் தேர்தலில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கும் இதே காரணத்தை அரவிந்த் கேஜரிவால் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai