சுடச்சுட

  

  வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கட்சிகளின் பொறுப்பு: ஜே.எஸ்.கேஹர்

  By DIN  |   Published on : 09th April 2017 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Khehar

  தேர்தல் சமயத்தில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
  தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில், இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:
  தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் அறிக்கைகள், தற்போது வெற்றுக் காகிதங்களாகி விட்டன. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போவதற்கு, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது போன்ற சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன.
  தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசியல் கட்சிகள் கருதுவதாலேயே, தேர்தல் அறிக்கைகள் வெற்றுக் காகிதங்களாக இருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
  கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில், ஓர் அறிக்கையில் கூட, தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வது, அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார-சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
  தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக அறிவிப்புகளுக்கு எதிராக வழிகாட்டுதல்களை உருவாக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
  இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேஹர் கூறினார்.
  கருத்தரங்கில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டிருந்தார். அவரது முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai