சுடச்சுட

  

  அஸ்ஸாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப் பணி கிடையாது?

  By DIN  |   Published on : 10th April 2017 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  assam

  அஸ்ஸாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப் பணியை மறுப்பது குறித்து அந்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

  இதுதொடர்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

  அஸ்ஸாமில் மக்கள்தொகை வரைவுக் கொள்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப் பணி கிடையாது என்று பரிந்துரை செய்துள்ளோம். இந்த விதிமுறைக்கு உள்பட்டு அரசுப் பணியில் சேருபவர்கள் தங்கள் பணிக்காலம் முடியும்வரை அதைக் கடைபிடிக்க வேண்டும்.
  மேலும் அரசுத் திட்டங்களின் பயன்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கும் இந்த விதி பொருந்தும். மேலும் உள்ளாட்சி மன்றங்கள், தன்னாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

  இந்த வரைவுக் கொள்கையின்படி அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரிப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

  மேலும் கல்விக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், புத்தகம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக அளிக்க விரும்புகிறோம். இதன்மூலம், பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தற்போது, திருமணம் செய்வதற்கான சட்டப்பூர்வ வயது பெண்களுக்கு 18-ஆகவும், ஆண்களுக்கு 21-ஆகவும் உள்ளது. இந்த வயது வரம்பை அதிகரிப்பது குறித்து உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும்.

  பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்ற வரைவுக் கொள்கை வழிவகை செய்யும்.

  அதேபோல், மாநில மக்கள்தொகை கவுன்சில், மாநில மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பணி மற்றும் தேர்தல்களில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் ஹிமந்த பிஸ்வ சர்மா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai