சுடச்சுட

  

  உ.பி.: கருப்புப் பணத்தை டெபாசிட் செய்ய எஸ்பிஐ கிளையில் 2000 புதிய கணக்குகள்!

  By DIN  |   Published on : 10th April 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்ய உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையில் புதிதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ஆம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த வங்கிக் கிளையில் புதிதாகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.8 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
  இந்த முறைகேடு குறித்து பெயர் குறிப்பிடப்படாத வங்கி அதிகாரிகள் மீதும், பணத்தை டெபாசிட் செய்தவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  கருப்புப் பணத்தை டெபாசிட் செய்வதற்காகவே பரேலி எஸ்பிஐ கிளையில் ஏராளமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதாக சிபிஐ-க்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி அந்த வங்கியில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கடந்த நவம்பர் 8-ஆம் தேதிக்குக் பிறகு டிசம்பர் 31-ஆம் தேதி வரை அந்த வங்கியில் மொத்தம் 2,441 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் ரூ.8 கோடிக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் 667 சேமிப்புக் கணக்குகள், 53 நடப்புக் கணக்குகள், 94 ஜன்தன் கணக்குகள், 50 வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள், 1,518 நிரந்தர வைப்புகள், 13 விழாக்கால கணக்குகள், இரு மூத்த குடிமக்கள் கணக்குகள், ஓர் அரசுக் கணக்கு ஆகியவை அடங்கும்.
  சில தனிநபர்களுடன் சேர்ந்த வங்கி அதிகாரிகளை முறைகேடாக இந்தக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். வங்கிக் கணக்குகளுக்கும், டெபாசிட்டாக பெறப்பட்ட தொகைக்கும் உரிய ஆவணங்களும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai