சுடச்சுட

  

  குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்.பி. பிரபாத்சிங் மகன் மீது அந்த மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  குஜராத் மாநிலம், பஞ்ச்மஹல் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பிரபாத்சிங் சௌஹான். இவர் அண்மையில் பாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்தார்.
  இவரது மகன் பிரவீண்சிங் சௌஹான், கோத்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரவீண் சிங் சௌஹான் வீட்டில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்று வருவதாக மாநில குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
  இதன்பேரில், அவரது வீட்டில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை சோதனை செய்தனர்.
  அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்.
  சோதனை நடைபெற்றபோது, பிரவீண் சிங் சௌஹான் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
  எனினும், பிரவீண் சிங் சௌஹான் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai