சுடச்சுட

  

  ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவின் மூத்த சகோதரர் ரவிசங்கர் யாதவ் (75) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
  விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த ரவிசங்கர் யாதவ் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடலுறுப்புகள் செயலிழப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார் என்று மருத்துவமனைத் தலைவர் தெரிவித்தார்.
  மத்தியப் பிரதேச மாநிலம், ஹோஷங்காபாத் மாவட்டத்துக்குள்பட்ட பாபாய் கிராமத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று சரத் யாதவின் உறவினர் மனோஜ் படேல் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai