Enable Javscript for better performance
செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் கைது

    By DIN  |   Published on : 10th April 2017 04:34 AM  |   அ+அ அ-   |    |  

    woodcutter

    எர்ரகுட்டா வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழக தொழிலாளர்கள்.

    திருப்பதியை அடுத்த பாக்கராபேட்டை, எர்ரகுட்டா வனப்பகுதிகளில், செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
    திருப்பதியை அடுத்த பாக்கராபேட்டை வனப்பகுதியில், செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
    அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 20 பேர், செம்மரக் கட்டைகளை சுமந்து செல்வதை கண்டனர்.
    போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றபோது, தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு, கற்களை வீசி, போலீஸாரை தாக்கினர்
    இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக வானத்தை நோக்கி 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, செம்மரத் தொழிலாளர்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடினர்.
    இருப்பினும் அவர்களில் 5 பேரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைதானவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் (29), ராமன் (27), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை (31), சின்னசாமி (35), ரகுபதி (32) என்பது தெரியவந்தது.
    இதேபோல், எர்ரகுட்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையைச் சேர்ந்த வி.கருணாகர் (37), கே.முருகன் (29) ஆகியோரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp