சுடச்சுட

  

  தலாக் என்ற வார்த்தையை 3 முறை சொல்வது, விவாகரத்து ஆகாது என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி தெரிவித்தார்.

  உத்தரப் பிரதேச மாநிலம், அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், முஸ்லிம் மதத்தில் 3 முறை தலாக் தெரிவித்து, விவாகரத்து பெறும் முறை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
  3 முறை தலாக் தெரிவிப்பது ஒரு விவகாரம் கிடையாது. தலாக் என்ற வார்த்தையை 3 முறை தெரிவிப்பது மட்டும் தலாக் ஆகாது.
  குரானைப் படித்து, தங்களுக்குத் தேவையான கேள்விகளுக்கு விடைகளை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யார் எதை சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றக் கூடாது.
  குரானில் அப்படி ஒரு விதி இல்லை. அந்த விதியை அவர்கள்தான் (முல்லாக்கள்) உருவாக்கியுள்ளனர். மொழியாக்கம் செய்யப்பட்ட குரானை படிக்கக் கூடாது. அரேபிய மொழியில் இருக்கும் குரானை வாசிக்க வேண்டும். அப்போது உண்மையை தெரிந்து கொள்ளலாம்.
  மௌலானா அல்லது முல்லாக்கள் என்ன தெரிவித்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. குரானையும், ஹாதீûஸயும் கட்டாயம் வாசிக்க வேண்டும். அதில் ரசூல் என்ன தெரிவித்திருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்று சல்மா அன்சாரி கூறினார்.
  தலாக் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணையின்போது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தலாக் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கக் கூடாது என்றும், இது நீதித்துறை வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசு தரப்பில் கடந்த அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட பதிலில், தலாக், நிக்கா ஹலாலா ஆகிய முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai