சுடச்சுட

  

  திருப்பதியில் வெப்ப நிலை உச்சத்தைத் தொடலாம்: மக்களுக்கு எச்சரிக்கை

  By DIN  |   Published on : 10th April 2017 02:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sunset1


  திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் அடுத்த ஒரு சில நாட்களுக்கு வெப்ப நிலை உச்சத்தைத் தொடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து திருப்பதி மாநகராட்சி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு 119 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

  எனவே, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்போடு இருக்கும்படியும், மதிய வேளையில் அவசியம் ஏற்படாவிட்டால் வெளியில் வருவதை தவிர்த்துவிடும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  அதிக வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் குழந்தைகளையும், முதியவர்களையும் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai