சுடச்சுட

  

  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை: தலைமை நீதிபதி கேஹர்

  By C.P. சரவணன்  |   Published on : 10th April 2017 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  confederation

   

  இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு நடத்தும் “Economic Reforms With Reference to Electoral Issues” என்ற தலைப்பிலான கருத்தரங்கை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 8ம் தேதி துவக்கி வைத்தார்.

  அதில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர், ஜாதி அரசியலை முன்னிருத்தி தேர்தலில் வாக்கு சேகரிப்பது வெற்றி பெறுவது சமூக-பொருளாதார நீதிக்கு எதிரானது, நலிந்த மற்றும் எழ்மையிலுள்ள சமூக மக்களை வைத்து அரசியல் செய்வது என்பது இந்திய தேர்தல் அரசியலாக வெகு காலம் மேலாதிக்கம் செய்து வருகிறது.

   

  ஜாதி பிரச்சினைகள் வேறு வகைகளில் திரிக்கப்பட்டு, இவை தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க பயன்படுகிறது. இதுபோன்ற ஜாதி விசயங்கள் எதிர்பாராத திருப்பங்களை சில தேதல் முடிவுகளில் தெரிவதால், அரசியல் கட்சிகளும் அரசியல் கூட்டணி, சமூக நுட்பம்  போன்ற விசயங்களில் ஆதரவை தேட காரணமாகிறது.

  இவ்வாறான தேர்தல் முறைகளில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போவதுஒரு பிரச்சினையாக உருவாவதில்லை. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும் எந்தவித பின் விளைவுகளும் ஏற்படுவதில்லை. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், அரசியல் கட்சிகளுக்கு எவ்வித சட்ட விளைவுகளும் ஏற்படுவதில்லை.

  சமச்சீரற்ற குடிமை, குறைந்தபட்ச ஞாபகத்தன்மை போன்றவைகளால் தேர்தல் அறிக்கை ஓர் சாதாரண காகிதமாக ஆகிவிடுகின்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் கமிஷன் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், வாக்கு பெட்டிகள் சம்மந்தமாக அத்துமீறல் செய்யும் அரசியல் கட்சிகள் மிது நடவடிக்கை எடுக்க வழிகாட்டுதல், நெறிமுறைகளை விரைவில் உருவாக்க வேண்டும்.

  2014 பொதுத் தேர்தலில் பயம்படுத்திய 'Your Voice Our Pledge' and 'Ek Bharat Shreshtha Bharat' போன்ற ஸ்லோகன்கள் பொருளாதார சீர்திருத்தத்திற்கோ, சமூக பொருளாதார நீதிக்கோ முற்றிலும் தொடர்பற்றது. பொருளாதார சீர்திருத்தம் என்பது நம் அரசியலமைப்பின் உத்தரவு கொள்கைகளை(directive principles) சார்ந்து இருக்க வேண்டும். இதுவே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடாகும்.

   

  நீதிபதி தீபக் மிஸ்ரா, வாங்கும் சக்திக்கு தேர்தலில் இடமில்லை. வேட்பாளரும் தேர்தல் ஒரு முதலீடு என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 1996 ஆம் ஆண்டு இது பற்றி கருத்துத் தெரிவித்த உச்சநீதிமன்றம், கிடைக்கும் மனிதர்களில் மிகச் சிறந்த மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும். அது உயர்ந்த தேர்தல் நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் அடைய முடியுமே தவிர, எதிர்மறை வாக்குமுறையில் வேட்பாளரை நீக்கக் கூடாது எனவும் வாக்காளர்களும், வேட்பாளர்களும் ”கடனில்லா ஆபத்தில்லா வாழ்வு” (Out of Debt Out of Danger) என்ற முதுமொழியை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

  தலைமை நீதிபதி கூறியது போல் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிக்கை, இலவசங்கள் சம்மந்தமாக கட்சிகளுக்கு விரைந்து நெறிமுறைகள் வகுக்கவும், தேர்தல் அறிக்கை அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
  மின்னஞ்சல்: sharavanan.cp@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai