சுடச்சுட

  

  நாடு முழுவதும் பசு வதையை தடை செய்ய சட்டம் வேண்டும்: மோகன் பாகவத்

  By DIN  |   Published on : 10th April 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mohanbha

  நாடு முழுவதும் பசு வதையை தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
  மகாவீரர் ஜெயந்தியையொட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
  பசுக்களைக் கொல்வது என்பது களங்கமான செயலாகும். இது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  நாடு முழுவதும் பசு வதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ற வகையில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
  ஏற்கெனவே, பல மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை, பிற மாநில அரசுகளும் கடைப்பிடிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சட்டத்துக்கு உள்பட்டும், அரசியல் சாசனத்தை மீறாத வகையிலும் செயல்பட வேண்டும்.
  மேலும், அந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் நம்பிக்கைகளுக்கு ஊறு ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும்.
  பசுப் பாதுகாப்பு இயக்கத்தில் பொதுமக்கள் மேலும், மேலும் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகள் அமைய வேண்டும். பசு வதைக்கு எதிராக வன்முறையில் இறங்குவது, நமது நோக்கத்தையே சிதைத்து விடும். வன்முறையில் ஈடுபடுமாறு எந்த சட்டமும் பரிந்துரைப்பதில்லை. எனவே, சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். கால்நடை மருத்துவராக இருப்பதால் நாட்டுப் பசுக்கள் சமுதாயத்துக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை நான் அறிவேன். பசுவின் சிறுநீரும், சாணமும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்பது அறிவியல் அறிஞர்களாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் மோகன் பாகவத்.
  அண்மையில் ராஜஸ்தான் மாநிலம், அல்வர் நகரில் பசுக்களைக் கடத்திச் சென்றவர்கள் மீது பசுப் பாதுகாவலர்கள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த முஸ்லிம் நபர் உயிரிழந்தார்.
  இந்நிலையில், பசுப் பாதுகாவலர்கள் வன்முறையில்
  இறங்கக் கூடாது என்ற ரீதியில் மோகன் பாகவத் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai