சுடச்சுட

  

  பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் சிக்கலா? புதிய நடைமுறை அறிமுகம்

  By DIN  |   Published on : 10th April 2017 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aadhar

  நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைப்பதில் இருக்கும் சில சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  சமையல் எரிவாயுக்கான மானியம் பெறுவது, ஓய்வூதியம் பெறுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. அதேபோல், வருமான வரிக் கணக்கினை சமர்ப்பிப்பதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, பான் எண்ணுடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இனி வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்ய முடியும்.
  இவ்வாறு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
  குறிப்பாக, பான் அட்டையில் உள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் ஒத்துப்போகவில்லையெனில், இதுபோன்ற சிக்கல்கள் நேரிடும். உதாரணமாக, பான் அட்டையில் ஒருவரது பெயர் "அவினாஷ்' என்று இருப்பதாக கொள்வோம். அதுவே ஆதார் அட்டையில் அவரது முழுப்பெயரான "அவினாஷ் ஆனந்த்' என இடம்பெற்றிருக்கும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில், அந்த நபரால் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது.
  புதிய முறை: இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நபர், ஆதாருக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர், பெயர் மாற்றத்துக்கான வேண்டுகோளை தேர்வு செய்து ஸ்கேன் செய்யப்பட்ட பான் அட்டையை அங்கு பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து, பான் அட்டையில் உள்ள பெயர் ஆதார் அட்டையிலும் பதிவேற்றப்பட்டுவிடும். அதன் பிறகு, பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம்.
  அதேபோல், பெயரை மாற்றிக் கொண்டவர்களுக்கென புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பான் அட்டையில் ஒரு பெயரும், ஆதாரில் மற்றொரு பெயரும் உள்ளவர்களுக்கு செல்லிடப்பேசியில் ரகசிய எண் அனுப்பி வைக்கப்படும்.
  பின்னர், சம்பந்தப்பட்டவர் ஆதார் இணையதளத்துக்குச் சென்று அந்த ரகசிய எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது, அவரது பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் உள்ள பிறந்த வருடம் சரிபார்க்கப்படும். இரண்டும் ஒத்துப்போகும்பட்சத்தில், பான் எண்ணுடன் ஆதார் தாமாக இணைத்துக் கொள்ளப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai