சுடச்சுட

  

  முப்பது ரூபாய் டிப்ஸுக்காக நண்பனைக் கொன்ற ஹோட்டல் ஊழியர்!

  By IANS  |   Published on : 10th April 2017 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hyderabad

   

  ஹைதராபாத்: முப்பது ரூபாய் டிப்ஸை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கொன்ற ஹோட்டல் ஊழியர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ராஜு மற்றும் கமலேஷ். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தின் ஹாபிஸ் பாபா நகரில் உள்ள ஸ்பைஸி பவார்ச்சி  எனும் உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அங்குள்ள நடைபாதை ஒன்றில்தான் அவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர்.

  இந்நிலையில் இன்று காமேஷுக்கு 30 ரூபாய் டிப்ஸ் கிடைத்துள்ளது. அதில் ராஜுவும் பங்கு கேட்டுள்ளார். ஆனால் காமேஷ் அனைத்து பணத்தையும் தானே வைத்துக் கொள்ள விரும்பியுள்ளார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் தகராறு மூண்டுள்ளது.

  இதில் கமலேஷ் நண்பன் ராஜுவை கீழே தள்ளியுள்ளார். இதில் ராஜுவுக்கு தலையில் பலத்த காயம் பட்டுள்ளது. அதிக ரத்த போக்கினால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். போலீசார் கமகேஷை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai