சுடச்சுட

  

  ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலை துண்டிக்கப்படும்: ராஜா சிங்

  By DIN  |   Published on : 10th April 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று ஹைதராபாத் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  ஹைதராபாதில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் பிரச்னையை எழுப்புவோம் என்று சிலர் கூறிவருகின்றனர். அவர்களின் எச்சரிக்கையை வரவேற்கிறோம். இத்தனை ஆண்டுகாலமாக அப்படிப்பட்ட சதிகாரர்களின் தலையைத் துண்டிக்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
  தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள கோஷாமஹால் சட்டப் பேரவைத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங். வலதுசாரி சிந்தனையாளரான இவர், பல முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai