சுடச்சுட

  

  ரூ.2 லட்சத்துக்கு மேல் கடனை ரொக்கமாக செலுத்தினால் வருமான வரிக் கணக்கில் காட்ட உத்தரவு

  By DIN  |   Published on : 10th April 2017 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேலான கடன், கடன் அட்டைக்கான (கிரெடிட் கார்டு) தொகையை, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய 50 நாள்களில் ரொக்கமாக செலுத்தினால் வருமான வரிக் கணக்கில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  கருப்புப் பணத்தை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு, பழைய பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் எந்தெந்த வழிகளில் அவற்றை புதிய நோட்டுகளாக மாற்றியுள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட காலகட்டத்தில் அரசுக்கான வரி, கடன்கள் ஆகியவை பெருமளவில் பழைய ரூபாய் நோட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளன.
  இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட அடுத்த 50 நாள்களில் ரூ.2 லட்சத்துக்கு மேலான கடன், கடன் அட்டை பாக்கிகளை ரொக்கமாக செலுத்தியவர்கள் அது தொடர்பான விவரத்தை வருமான வரித் தாக்கலின்போது தெரிவிக்க வேண்டும். வருமான வரித் தாக்கலுக்காக இந்த ஆண்டு எளிமைப்படுத்தப்பட்ட ஒரு பக்க படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை கையாண்டதற்கென தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் அதில் உரிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
  கடன் அட்டை, வங்கிகளில் பெற்ற கடன் ஆகியவை பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, கடன், கடன் அட்டைக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தியவர்கள் யார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai