சுடச்சுட

  

  ரூ.5,400 கோடி கருப்புப் பணம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  By DIN  |   Published on : 10th April 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.5,400 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
  இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு, ஜனவரி 10-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 1,100 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  வங்கிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் செலுத்தப்பட்ட பணம் தொடர்பாக இதே காலகட்டத்தில் மொத்தம் 5,100 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் இணைந்து மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.5,400 கோடி ரொக்கம் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சுமார் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் அமலாக்கத் துறைக்கும், சிபிஐக்கும் மாற்றப்பட்டுள்ளது என்று அந்த உறுதிமொழி பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai