சுடச்சுட

  

  7 மாநில இடைத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 82% வாக்குப் பதிவு

  By DIN  |   Published on : 10th April 2017 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vote

  vote

  கர்நாடகம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேற்கு வங்கம், தில்லி, ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் சட்டப் பேரவை காலியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கத்தின் காந்தி-தெற்கு தொகுதியில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
  ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாயின. முன்னதாக, பொதுத் தேர்தலின்போது இத்தொகுதியில் 81.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
  அஸ்ஸாம் மாநிலம் திமாஜி சட்டப் பேரவைத் தொகுதியில் 66.97 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது.
  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகத்தில் நஞ்சன்கூடு, குண்டல்பேட் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மாலை 5 மணி வரை முறையே 78 சதவீதம், 76 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
  ஆம் ஆத்மி ஆட்சி நடத்தும் தில்லி மாநிலத்தில் உள்ள ராஜெüரி கார்டன் சட்டப் பேரவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 44 சதவீத வாக்குகள் பதிவாயின.
  ஹிமாசலப் பிரதேசத்தின் போரஞ்ச் சட்டப் பேரவை தொகுதியில் 63 சதவீத வாக்குகள் பதிவாயின.
  மத்தியப் பிரதேசத்தின் அதேர் தொகுதியில் 60 சதவீத வாக்குகளும், பாந்தவ்கர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai