சுடச்சுட

  

  அடுத்த மக்களவைத் தேர்தலையும் மோடி தலைமையில் சந்திக்க முடிவு

  By DIN  |   Published on : 11th April 2017 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சந்தித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற இணைந்து பாடுபட இருப்பதாக அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
  பாஜக கூட்டணி தலைவர்களின் கூட்டம், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக தேசித் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கூட்டணியைச் சேர்ந்த சிரோமணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்திக்குப் பதிலாக, அவரது சார்பில் மற்றொரு நிர்வாகி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
  இந்தக் கூட்டத்தில், மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பாராட்டினர்.
  வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையும் பிரதமர் மோடி தலைமையில் சந்தித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதற்கு இணைந்து பாடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  மேலும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி போன்ற வலுவான தலைமை தேவை என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்
  லி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai