சுடச்சுட

  

  அரசு அலுவலகங்களில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு:  உ.பி.: பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியப் பிடித்தம்

  By DIN  |   Published on : 11th April 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச அரசு அலுவலகங்களில் அந்த மாநில அமைச்சர்கள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலான ஊழியர்கள் காலதாமதாக பணிக்கு வந்ததையும், பலர் விடுப்பு எடுத்திருந்ததையும் கண்டு அமைச்சர்கள் அதிருப்தி அடைந்தனர்.
  இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அமைச்சர்கள், பணிக்கு வராதவர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.
  உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சராக உள்ள சூர்யபிரதாப் சாஹி, அவரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு அலுவலகங்களில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பலர் பணிக்கு வராமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யுமாறு உத்தரவிட்டார். முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் அரசு ஊழியர்கள் இருந்ததைப் போன்ற மெத்தனப் போக்கை இனிமேல் கடைப்பிடிக்கக் கூடாது எனக் கண்டித்த அவர், இதே நிலை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
  இதேபோன்று மாநில சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சர் மோசின் ராஸா, அவரது துறைகளின் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். காலை 11.30 மணி வரை பணிக்கு எவரும் வராததைக் கண்டு அவர் அதிருப்தி அடைந்தார். வரும்நாள்களில் 9.30 மணிக்குள் அலுவலகத்துக்கு ஊழியர்கள் வரவேண்டும் என்று உத்தரவிட்ட அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தார்.
  எய்ம்ஸ் பணிகள் தொடக்கம்: இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 25 மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளும் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் டாண்டன் கோபால்ஜி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai