சுடச்சுட

  

  உலகின் அனைத்து பகுதியில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

  By DIN  |   Published on : 11th April 2017 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranabmukherjee

  உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பயங்கரவாதத்தை உடனடியாக வேரறுக்க வேண்டுமென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, பயங்கரவாத ஒழிப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
  இந்த சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில் பிரணாப் முகர்ஜி கூறியிருப்பதாவது:
  பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்துவது திருப்தி அளிப்பதாக உள்ளது. பயங்கரவாதம் எந்த வகையில் தலையெடுத்தாலும் அதனை ஒடுக்க வேண்டும். உலகின் அனைத்துப் பகுதியில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரறுக்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
  இந்தியாவுக்கு அணுமின் தேவைக்காக யூரேனியம் அளிப்பதில் ஆஸ்திரேலியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆஸ்திரேலியாவில் 60,000 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்வித் துறையில் இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது.
  இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பல்வேறு துறையில் கடந்த சில ஆண்டுகளாக உறவு மேம்பட்டு வருகிறது. நீண்டகால மூதலீட்டுக்கு இந்தியா சிறந்த வாய்ப்பாக உள்ளது.
  இந்தியாவில் தயாரிப்போம் கூட்டம், இந்தியாவில் முதலீடு செய்வோம் மாநாடு ஆகியவை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகின்றன என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai