சுடச்சுட

  
  ponnarkamal

  புதுதில்லி: தலைநகர் தில்லியில் நடிகர் கமல்ஹாசன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

  நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். தொடர்ந்து தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

  தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், தலைநகர் தில்லியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனை பொன்னாடை போர்த்தி வரவேற்றுள்ளார் அமைச்சர்.

  இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai