சுடச்சுட

  

  கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்

  By DIN  |   Published on : 11th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குறைந்தபட்சத் தகுதியை எட்டுவதற்கு வரும் 2019-ஆம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
  கல்வி உரிமைச் சட்டமானது கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டப்படி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குறைந்தபட்சத் தகுதியை எட்டுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அத்தகுதியை எட்டியிருக்க வேண்டும்.
  எனினும், பணியில் உள்ள பயிற்சி பெறாத ஆசிரியர்கல் அனைவருக்கும் மாநில அரசுகளால் மேற்கண்ட கால அவகாசத்துக்குள் பயிற்சியை முடித்திருக்க இயலவில்லை.
  எனவே, அந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து முடிப்பதற்கு ஏதுவாக அவர்கள் தகுதி பெறுவதற்கான காலக்கெடுவை வரும் 2019-ஆம் ஆண்டு வரை நீட்டிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொண்டன.
  இதையடுத்து மேற்கண்ட அவகாசத்தை அளிக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தத்துக்கான மசோதாவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மக்களவையயில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். அதன்படி, 2015, மார்ச் 15 அன்று நியமிக்கப்பட்ட, குறைந்தபட்சத் தகுதி பெறாத ஒவ்வோர் ஆசிரியரும் அந்தத் தகுதிகளை நான்கு ஆண்டுகளுக்குள் (2019 மார்ச் 31-க்குள்) பெற்றாக வேண்டும்.
  மேலும், 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அளிப்பதற்கான ஷரத்தும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
  ஐஐஐடி-களுக்கான மசோதா: இதனிடையே, நாட்டில் பொதுத்துறை-தனியார் துறை கூட்டுப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள 15 இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் தங்கள் மாணவர்களுக்கு பட்டங்களை அளிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை மத்திய அரசு, மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. இந்த மசோதாவையும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai