சுடச்சுட

  

  காமன்வெல்த்: கல்மாடியின் நியமனத்துக்கு மன்மோகன் அலுவலகமே பொறுப்பு

  By DIN  |   Published on : 11th April 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kalmadi

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த அப்போதைய பிரதமர் அலுவலகம்தான் காமன்வெல்த் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக சுரேஷ் கல்மாடியை நியமித்தது என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தெரிவித்துள்ளது.

  கடந்த 2010-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நிர்வாகரீதியாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதன் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டார்.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமைத் கணக்குத் தணிக்கை அமைப்பு (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்து வந்தது. அந்த அறிக்கை, விரைவில் இறுதி செய்யப்படலாம் என்றும் அதன் பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. இந்தச் சூழலில் பொதுக் கணக்குக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த நியமனத்துக்கு அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
  அதனை அலட்சியப்படுத்திவிட்டு காமன்வெல்த் போட்டிகளுக்காகன தலைவராக கல்மாடியை நியமித்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம்தான்.
  இது ஒருபுறமிருக்க, காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்குமாறு அப்போதைய பிரதமர் கடந்த 2006-ஆம் ஆண்டே உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ளாமல், இரு ஆண்டுகள் கழித்தே அதை பிரதமர் அலுவலகம் செய்து முடித்துள்ளது.
  பிரதமரின் அறிவுறுத்தல்களை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது பிரதமர் அலுவலகத்தின் கடமைகளில் முக்கியமானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai