சுடச்சுட

  

  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  இதுதொடர்பாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை கூறியதாவது:
  குப்வாரா மாவட்டம், கேரன் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பயங்கரவாதிகள் சிலர் திங்கள்கிழமை காலை ஊடுருவ முயன்றனர்.
  இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில், 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் யாரேனும் அங்கு பதுங்கியுள்ளனரா என்பது தொடர்பாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai