சுடச்சுட

  

  சத்தியாகிரக நூற்றாண்டு: காந்தி குறித்த 3 புத்தகங்கள் மறுவெளியீடு

  By DIN  |   Published on : 11th April 2017 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியதன் நூற்றாண்டை முன்னிட்டு காந்தி குறித்த 3 புத்தகங்களை மத்திய அரசு மறுவெளியீடு செய்துள்ளது.
  தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, "காந்தி இன் சம்பரண்', "ரோமைன் ரோலண்ட் அண்ட் காந்தி கரஸ்பாண்டன்ஸ்' "காந்தியின் வாழ்க்கை வரலாறு' ஆகிய 3 புத்தகங்களின் புதிய பதிப்பை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  சத்தியாகிகத்தை காந்தியடிகள் தொடங்கியதன் நூற்றாண்டை முன்னிட்டு அவர் குறித்த உயரிய கருத்துகள் அடங்கிய புத்தகங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பிகாரின் சம்பரணில் விவசாயிகளுக்காக காந்தியடிகள் முன்னெடுத்த போராட்டம்தான் பின்னர் தேச விடுதலைக்கான அஹிம்சை வழிப் போராட்டமாக உருவெடுத்தது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai