சுடச்சுட

  

  சிந்து மாகாணம் இந்தியாவில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது: அத்வானி

  By DIN  |   Published on : 11th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Advani

  ""நான் பிறந்த பூமியான பாகிஸ்தானின் சிந்து மாகாணம், தேசப் பிரிவினை காரணமாக, இந்தியாவில் இடம்பெறாமல் போனது வருத்தமளிக்கிறது'' என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
  தில்லியில் "இந்தியா ஃபவுண்டேஷன்' சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் அத்வானி தனது வேதனையைப் பதிவு செய்தார். அவர் மேலும் பேசியதாவது:
  என்னைப் பற்றிய ஒரு தகவல் உங்களில் எத்தனைப் பேர் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா சுதந்திரம் பெறாமல், பிரிக்கப்படால் இருந்தபோது, இந்தியாவில் ஒரு பகுதி இருந்தது. அந்தப் பகுதியில்தான் நான் பிறந்தேன்.
  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அந்தப் பகுதி எங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டது. நான் பிறந்த பூமியான சிந்து மாகாணம், இந்தியாவில் இடம்பெறவில்லை. தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த மாகாணம், எங்களுடன் சேரவில்லை. இதனால், சிந்து மாகாணத்தில் வாழ்ந்த நானும், எனது சகாக்களும் மிகுந்த வருத்தம் அடைந்தோம். வங்கதேசப் பிரதமர் இங்கு வந்திருப்பதால், அவரது முன்னிலையில் எனது வேதனையைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன் என்றார் அவர்.
  89 வயதாகும் முதுபெரும் தலைவரான அத்வானி, கடந்த காலங்களிலும் இதே வேதனையை சில சமயங்களில் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு ஒருமுறை, ""சிந்து மாகாணமும், கராச்சி நகரும் இந்திய எல்லைக்குள் இல்லாததை நினைக்கும் நேரங்களில் வருத்தமடைகிறேன்'' என்று அத்வானி கூறியிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai