சுடச்சுட

  

  சிபிஐ, அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது

  By DIN  |   Published on : 11th April 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்களுக்கு எதிராக அமலாக்கத் துறையும், சிபிஐ அமைப்பும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
  மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியபோது காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா எழுந்து பிரச்னையொன்றை எழுப்பினார். அப்போது, அவர் பேசியதாவது:
  பாஜக அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளின் மூலம் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.
  குறிப்பாக, இந்த அமைப்புகளின் மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
  (காங்கிரûஸ சேர்ந்த ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீதான முறைகேடு வழக்கு தொடர்பாக, சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் அவர் மீது நடவடிக்கை எடுத்து வருவதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்).
  அதேசமயம் பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
  உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் செய்தித் தாள் நிறுவனத்துக்காக கொடுக்கப்பட்ட நிலம் வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
  அதேபோல், ஹரியாணாவில் "பதஞ்சலி' என்னும் தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  சட்டமும், விதிமுறைகளும் அனைவருக்கும் பொதுவானவை. இந்நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக அமலாக்கத் துறையையும், சிபிஐ அமைப்பையும் மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக விதி எண் 267-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள நோட்டீûஸ ஏற்க வேண்டும் என்றார் ஆனந்த் சர்மா.
  இதேபோன்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாதும் வலியுறுத்தினார்.
  அப்போது அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டுப் பேசுகையில், "விதி எண் 267-இன் கீழ் அளிக்கப்பட்ட நோட்டீûஸ ஏற்க முடியாது. மாநில முதல்வர்கள் மீதான புகார்கள் குறித்து அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தான் விவாதிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் அல்ல' என்றார்.
  இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த அமளி காரணமாக, பி.ஜே.குரியன் அவையை அடுத்தடுத்து இருமுறை ஒத்திவைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai