சுடச்சுட

  

  பூட்டியிருக்கும் கதவுகளை உடைக்கும் தொழில் ரகசியம்:  போலீஸை வியக்க வைத்த கொள்ளையன் (விடியோ)

  By DIN  |   Published on : 11th April 2017 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  burglar_video


  பெங்களூர்: பூட்டுகளையும், பூட்டியிருக்கும் கதவுகளையும் சத்தம் இல்லாமல் திறக்கும் தொழில் ரகசியத்தை, திருட்டு வழக்கில் கைதானவர் காவல்துறையிடம் சொல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது.

  வீட்டைப் பூட்டிவிட்டோமா என்று சோதிப்பதோடு அல்லாமல், பூட்டிய பூட்டை பலரும் இழுத்துப் பார்த்துவிட்டுத்தான் வெளியே கிளம்புவோம்.

  ஆனால், இந்த விடியோவைப் பார்த்தீர்களானால், இனி வீட்டை பூட்ட மாட்டீர்கள். குறைந்தபட்சம் அந்த பூட்டாவது மிஞ்சும் என்று நிச்சயம் நினைப்பீர்கள்.

  பெங்களூருவில் திருட்டு வழக்கில் கைதான கொள்ளையன் ஒருவன், பூட்டுகளை உடைத்து கொள்ளையடிப்பதை, காவல்துறையினருக்கு நேரடியாக செய்து காட்டினான்.

  பங்ச்சர் எடுக்கும் இரும்பு ராட் போன்ற ஒரு கருவியைக் கொண்டு கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை வெகு லாவகமாக கொள்ளையன் திறப்பதும், எப்படிப்பட்ட பூட்டுகளையும் அவன் வைத்திருக்கும் ஸ்க்ரூ டிரைவர் முதல் சிறிய கோடாரி போன்ற வெட்டுக் கருவியைக் கொண்டு மரக் கதவாக இருந்தாலும், இரும்பு கேட்டாக இருந்தாலும் எளிதில் திறந்துவிடுகிறான்.

  இதனைப் பார்த்து காவல்துறையினர் வியந்ததோடு மட்டும் அல்ல, விடியோவை பார்க்கும் யாரும் வியப்படைவோம் என்பது உண்மை.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai