சுடச்சுட

    

    மத்திய அரசின் நிர்பந்தத்தாலேயே சிவசேனை எம்.பி. மீதான தடை நீக்கம்

    By DIN  |   Published on : 11th April 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் நிர்பந்தத்தினாலேயே, சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
    இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல்தான், சிவசேனை எம்.பி. கெய்க்வாட் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது தடையும் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் தனது செயலுக்காக விமான நிறுவனத்திடமோ அல்லது விமான நிறுவன ஊழியர்களிடமோ மன்னிப்பு கேட்கவில்லை. எனினும், ஏர் இந்தியா நிறுவனம் தனது தடையை விலக்கிக் கொண்டது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து வந்த உத்தரவுதான் காரணம்.
    கெய்க்வாட் மீதான புகார் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை. இந்த விவகாரத்துக்காக தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கு செல்லவும் தயாராக உள்ளோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
    தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவன மேலாளரை காலணியால் தாக்கிய விவகாரத்துக்காக கெய்க்வாடுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்தது. எனினும், இந்தத் தடையை கடந்த வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.
    இதற்கு, தனது செயலுக்காக கெய்க்வாட் மக்களவையில் வருத்தம் தெரிவித்ததை ஏர் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai