சுடச்சுட

  

  ம.பி.யில் மே 1 முதல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்குத் தடை

  By DIN  |   Published on : 11th April 2017 11:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  plastic

  மத்தியப் பிரதேசத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளின் பயன்பாட்டுக்கு மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக, மாநில செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
  இதில், மாநிலம் முழுவதும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டுக்கு மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
  நெகிழிப் பைகளை உண்ணும் பசுக்கள் சில நேரங்களில் மரணத்தை தழுவுகின்றன. நெகிழிப் பைகளுக்கு தடை விதிப்பதன்மூலம், பசுக்களைக் காக்க முடியும். மேலும், நெகிழிப் பைகளால் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். இந்தத் தடையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும்.
  நெகிழியிலான குடங்கள், பிற பொருள்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. நெகிழிப் பைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai