சுடச்சுட

  

  முத்தலாக் முறை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறுத்தப்படும்: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

  By DIN  |   Published on : 11th April 2017 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்தலாக் முறையை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறுத்த முடிவு செய்திருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் கால்பே சாதிக் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னௌரில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  முத்தலாக் முறையானது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரான ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயத்தில், அது இஸ்லாமிய மத விவகாரத்துக்கு உள்பட்டது. ஆதலால், இந்த விவகாரத்துக்கு இஸ்லாமியர்களே தீர்வு காண்பதுதான் சரியானது.
  முத்தலாக் முறையை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறுத்திவிட அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. மாட்டு இறைச்சியை உட்கொள்ளுமாறு எந்த இஸ்லாமிய மதப் புத்தகங்களும் அறிவுறுத்தவில்லை. எனவே, இஸ்லாமியர்கள் மாட்டு இறைச்சியை உண்ண வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
  அதேநேரத்தில், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் அராஜகங்களில் ஈடுபடுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. அதுபோன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  ராமர் கோயில் விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். சர்ச்சைக்குரிய நிலத்தின் சில பகுதிகளை ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு எட்டப்படும். அதேபோல், ராமர் கோயில் எழுப்பப்படவுள்ள அந்த இடத்தில் மசூதி அமைக்க இஸ்லாமியர்கள் வலியுறுத்தக் கூடாது என்றார் கால்பே சாதிக்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai