சுடச்சுட

  

  மோடியின் சுற்றுப் பயணங்களுக்கு எந்தத் துறையின் கஜானா காலியாகிறது?

  By DIN  |   Published on : 11th April 2017 04:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi1


  புது தில்லி: இந்தியப் பிரதமர் மோடி எந்த அளவுக்கு பிரபலமானவரோ அந்த அளவுக்கு அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களும் பிரபலம்தான்.

  உலக நாடுகள் 195ல் சரியாக 56 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று வந்துள்ளார். அதிலும் பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டுக்குப் பிறகு சரியாக இரண்டே முக்கால் ஆண்டுகளில் 56 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சுற்றுப் பயணம் என்றால், மோடியுடன் முக்கிய அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அந்த பயணத்தின் போது உடன் செல்வார்கள். இவற்றுக்கு ஆகும் செலவு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, பாமர மக்களின் தூக்கங்களை கெடுப்பதும் வழக்கம்தான்.

  அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

  பிரதமராக பதவியேற்று முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்ற போது மோடியின் பயணத்துக்கு மத்திய அரசு செய்த செலவு வெறும் ரூ.2 கோடியே 45,27,465 தான்.

  ஆனால், அடுத்த பிரேசில் பயணத்துக்கு ரூ.20 கோடியும், 2014ம் ஆண்டு ஜப்பான் சென்றதற்கு 13 கோடியும் செலவாகியுள்ளது. இது இப்படியே அடுத்தடுத்த உலக நாடுகளின் பயணத்துக்கு 20, 30 என சில பல கோடிகளைக் எட்டியது.

  2014 முதல் 2016ம் ஆண்டு மே மாதம் ஈரான் சென்ற பயணத்துக்கான செலவு வரை மட்டுமே தற்போது மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகான பயணச் செலவுகள் இன்னும் கணக்கிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  பொதுவாக பிரதமர் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான செலவுகள் அனைத்தும், 'மத்திய அமைச்சர்கள் - பிரதமரின் விமான பராமரிப்புச் செலவு - இதர செலவுகள்' கணக்கில் இருந்து செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க : உலகம் சுற்றும் வாலிபர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்: அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்

  மேலும், பிரதமரின் உள்நாட்டுப் பயணச் செலவுகள், இந்திய பாதுகாப்பு துறையால் மேற்கொள்ளப்படும்.

  2015 - 16ம் ஆண்டுகளில் மோடி மேற்கொண்ட சுற்றுப் பயணத்துக்கான மொத்த செலவு ரூ.567 கோடி. 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மொத்த செலவு வெறும் (ஜஸ்ட்) ரூ.1,500 கோடி மட்டுமே.

  காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, 2009-10ம் நிதியாண்டு முதல் 2013 - 14ம் ஆண்டு அதாவது 5 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மொத்த பயணச் செலவு ரூ.1500 கோடி. ஆனால், இரண்டே முக்கால் ஆண்டில் மோடியின் பயணச் செலவு சுமார் ரூ.1,140 கோடியை எட்டிவிட்டது.

  மேலும் படிக்க.. இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள்: நரேந்திர மோடி

  மேலும் படிக்க.. மோடியின் தாய்லாந்து, ஜப்பான் பயணம்

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai