சுடச்சுட

  

  வரைபடங்களைப் பதிவிறக்கம் செய்ய புதிய இணையதளம்: ஆதார் எண் அவசியம்

  By DIN  |   Published on : 11th April 2017 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு வரைபடங்களை (Map) பதிவிறக்கம் செய்வதற்கான பிரத்யேக இணையதளத்தை இந்திய நிலஅளவைத் துறை (சர்வே ஜெனரல் ஆஃப் இந்தியா) திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
  அந்த இணையதளப் பக்கத்தில் பொதுமக்கள், தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்து கொண்டு வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிலஅளவைத் துறையின் 250-ஆவது ஆண்டு விழா தில்லியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ட்ற்ற்ல்://ள்ர்ண்ய்ஹந்ள்ட்ங்.ன்ந்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற பிரத்யேக இணையதளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
  நிலஅளவைத் துறை சார்பில் சுமார் 5,000 வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இணையதளத்தில் 3,000 வரைபடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  ஆதார் எண்ணைப் பதிவு செய்து நாளொன்றுக்கு 3 வரைபடங்கள் வரை ஒருவர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
  வெளிநாட்டினர் எவரும் இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். விரைவில் 1,700 புதிய வரைபடங்கள் அந்த இணையதளப் பக்கத்தில் சேர்க்கப்படவுள்ளதாக நிலஅளவைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai