சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

  By DIN  |   Published on : 11th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச்சீட்டு வசதி செய்யப்படும் வரையில், அந்த இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் 13-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  உச்ச நீதிமன்றத்தில் சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்.பி. அதாவுர் ரஹ்மான் தொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒப்புகைச் சீட்டு வசதியுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டே தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த வசதியை தேர்தல் ஆணையம் செய்து முடிக்கும் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில், வாக்குச்சீட்டு முறை அடிப்படையில் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
  இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் ரஹ்மான் சார்பில் மூத்த வழக்குரைஞர் ப. சிதம்பரம் ஆஜராகி வாதாடுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒப்புகைச்சீட்டு அளிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவு இன்னமும் தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்படவில்லை' என்றார்.
  அப்போது, இதே விவகாரத்துக்காக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டி, அதே தினத்தில் இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai