சுடச்சுட

  

  வணிக ரீதியிலான வாடகைத் தாய் நடைமுறைக்கு தடை விதிப்பது தொடர்பான மசோதா குறித்து அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் நாடாளுமன்ற நிலைக் குழு கருத்துகளை வரவேற்றுள்ளது.

  வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த ஜனவரியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழு தனது அறிக்கையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
  இந்நிலையில், வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா தொடர்பான ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஹமீது அன்சாரி அறிவித்துள்ளார்.
  இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவைச் செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில், மசோதா குறித்து நிலைக்குழு ஆய்வு செய்து வருவதாகவும், "மசோதா குறித்து அனைத்துத் தரப்பினரும் தங்களது கருந்துகளைத் தெரிவிக்கலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.
  இந்த மசோதாவானது, சட்டப்பூர்வமாக திருமணமான தம்பதிகள் 5 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அவர்களுக்கு குழந்தை பிறக்காதபட்சத்தில் இதுகுறித்து மருத்துவரின் அத்தாட்சியுடன் வாடகைத் தாய் நடைமுறைக்கு முயலுவதற்கு வழிவகை செய்கிறது. இவர்களல்லாமல், வேறு எந்தத் தரப்பினரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதை மசோதா தடை செய்கிறது.
  மேலும், வாடகைத் தாயாக வருபவர் குழந்தையில்லாத பெண்ணின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai