சுடச்சுட

  

  ஸ்ரீநகர் தேர்தல் வன்முறை எதிரொலி: அனந்த்நாக் மக்களவை தொகுதி இடைத் தேர்தல் ஒத்திவைப்பு

  By DIN  |   Published on : 11th April 2017 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத் தேர்தலை மே மாதம் 25-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
  ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது மூண்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 8 பேர் பலியாகினர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதை கருத்தில் கொண்டு, அனந்த்நாத் தொகுதிக்கான இடைத் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
  இதுகுறித்து தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  தேர்தலை சீர்குலைக்கும் திட்டத்துடன், மிகப்பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்களில் சிலர் ஈடுபடலாம் என்று மாநில அரசு சந்தேகிக்கிறது; மாநிலத்தில் தற்போது தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இதை பரிசீலித்து, அனந்த்நாக் இடைத் தேர்தலை மே மாதம் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  மெஹபூபா சகோதரர் கோரிக்கை: முன்னதாக, அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தியின் சகோதரரும், அத்தொகுதி மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) வேட்பாளருமான தஸôதுக் முஃப்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது அவர், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் தேர்தல் நடத்துவதற்கு உகந்ததாக இல்லையென்றும், இதுதொடர்பாக மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறியிருந்தார்.
  இதை தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai