சுடச்சுட

  

  ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

  By DIN  |   Published on : 11th April 2017 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anushkaxx

   

  பொது இடத்தில் அனுமதியின்றி மின்சார சாதனப் பெட்டியை பொருத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில், ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு பிருஹம் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  மும்பையின் புறநகர் பகுதியான வெர்சோவாவில் உள்ள பத்ரிநாத் குடியிருப்பில் 20-ஆவது தளத்தில் அனுஷ்கா சர்மா வசிக்கிறார். இந்நிலையில், அவர் பொது மக்கள் நடமாடும் இடத்தில் மின்சார சாதனப் பெட்டியை பொருத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  அதன்பேரில், அனுஷ்கா சர்மாவுக்கு பிருஹம் மும்பை மாநகராட்சி கடந்த 6-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், பொது இடத்தில் பொருத்தியிருக்கும் மின்சார சாதனப் பெட்டியை நீக்க வேண்டும்; இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த நோட்டீஸில், அனுஷ்கா சர்மாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, அந்த குடியிருப்பிலுள்ள 2001, 2002-ஆம் எண் வீட்டின் உரிமையாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேநேரத்தில், தன் மீதான குற்றச்சாட்டை அனுஷ்கா சர்மா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அந்த குடியிருப்பின் 20-ஆவது தளத்தில் 3 வீடுகள், அனுஷ்கா சர்மாவின் குடும்பத்தினருக்கு சொந்தமானது.

  இதுதொடர்பாக அனைத்து அனுமதிகளும் 2013-ஆம் ஆண்டு முதல் பெறப்பட்டுள்ளது. அனுஷ்காவும், அவரது குடும்பத்தினரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். பொறுப்பான குடிமக்கள். பிறரை பாதிக்கும் எந்த செயலிலும் அவர்கள் ஈடுபடவில்லை' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai