சுடச்சுட

  

  உ.பி. கிராமங்களில் இனி குறைந்தபட்சம் 18 மணி நேர மின் விநியோகம்

  By DIN  |   Published on : 12th April 2017 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  electric

  உத்தரப் பிரதேசத்தில் மின் விநியோகத்தை மேம்படுத்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
  இதன்படி, கிராமப்புறங்களில் 18 மணி நேரமும், வட்டத் தலைநகரங்கள், புந்தேல்கண்ட் பகுதியில் 20 மணி நேரமும், மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேரம் மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டது.
  இதுதவிர 2019-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  3 மணி நேரம் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது: கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு பாதிப்பு இல்லாமல் மின்சாரம் வழங்க வசதியாக அப்பகுதியில் உள்ள பழுதடைந்த "டிரான்ஸ்பார்மர்'களை மாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  "அனைவருக்கும் மின்சார வசதி' என்ற திட்டத்தின்கீழ் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரும் 14-ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
  தேர்வெழுதும் மாணவர்களின் வசதிக்காக கிராமப்புறங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கட்டாயம் மின்விநியோகம் இருக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  ரூ.10,000-க்கு மேல் மின்கட்டணத்தை பாக்கி வைத்துள்ள விவசாயிகள் அதனை 4 தவணைகளாகச் செலுத்தலாம். உருளைக்கிழக்கு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஒரு குவிண்டால் ரூ.487 என்ற விலையில் மாநில அரசே கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai