சுடச்சுட

  

  ஏழைகளுக்கான உரிமைகள் ஆதார் அட்டையைச் சார்ந்திருக்கக் கூடாது

  By DIN  |   Published on : 12th April 2017 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழைகளுக்கான உரிமைகள் ஆதார் அட்டையைச் சார்ந்திருப்பதாகக் இருக்கக் கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக குழுத் தலைவர் என்.நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
  இந்திய அரசியலமைப்பால் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு இந்தியருக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  இருந்த போதிலும், பொது விநியோகத் திட்டம், முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் அவை ஏழைகளுக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், அந்த உரிமைகள் ஆதார் அட்டையைச் சார்ந்திருப்பதாக இருக்கக் கூடாது என்றார்.
  ஏழைகளுக்கான சிறப்புக் காப்பீட்டு திட்டங்கள் வேண்டும்: ஏழைகளுக்கான உறுப்பு தானம், உறுப்பு மாற்றும் சிகிச்சைக்கான சிறப்புக் காப்பீட்டுத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர்
  கே. அசோக்குமார் கேட்டுக்கொண்டார்.
  நாட்டில் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் 257 இதயங்கள், 130 நுரையீரல்கள், 1,615 சிறுநீரகங்கள் மாற்றப்பட்டுள்ளன.
  மேலும், மாற்று அறுவை சிகிச்சை மூலம், மொத்தம் 4,938 உறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகும். எனவே, உறுப்பு தானம், உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் ஏழை மக்களின் நலனுக்காக நிதி ஊக்குவிப்புத் திட்டங்களையும், சிறப்பு காப்பீட்டுத் திட்டங்களையும் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முக்கிய நகரங்களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் நீலகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் (தனி) அனில் மாதவ் தவே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai