சுடச்சுட

    

    கல்வித் தகுதியை பிரதமர் மோடி ரகசியமாக வைத்திருப்பது ஏன்? திக்விஜய் சிங் கேள்வி

    By DIN  |   Published on : 12th April 2017 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thikvijaising

    புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது கல்வித் தகுதியை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    பிரதமரின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்புவது குற்றமா? தனது கல்வித் தகுதி குறித்து பிரதமர் மோடி ஏன் ரகசியம் காக்கிறார். இதுவே, நாட்டு மக்களுக்கு தனது கல்வித் தகுதி குறித்து பொய் தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆதாரம் ஆகும் என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai