சுடச்சுட

  

  கேரள மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரை மலையாளப் பாடம் கட்டாயம் என்பதற்கான அவசரச் சட்டத்தை அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இது செயல்பாட்டுக்கு வருகிறது.
  ஆளுநர் பி. சதாசிவத்தின் ஒப்புதலைப் பெற்று இந்த அவசரச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
  இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  கேரளத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், நிதியுதவி பெறாத பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரை மலையாளப் பாடம் கட்டாயம்.
  அவசரச் சட்டத்தின்படி, மலையாளப் பாடம் சொல்லித் தரும் பள்ளிகளுக்கு மட்டுமே தடையில்லை சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்படும். மலையாளப் பாடம் சொல்லித் தராத பள்ளிகளின் தடையில்லை சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
  பள்ளிகளில் மலையாளத்தில் பேசுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தப் பள்ளி நிர்வாகமும் தடை விதிக்கக் கூடாது என்பதை அவசரச் சட்டம் உறுதி செய்கிறது.
  மலையாளம் அல்லாத இதர மொழியில் (உதாரணத்துக்கு ஆங்கிலம்) பேசுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடும் அறிவிப்புப் பலகை எதனையும் பள்ளி வளாகத்தில் வைக்கக் கூடாது என அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai