சுடச்சுட

    

    சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக முதல்கட்ட விசாரணை தொடங்கியது சிபிஐ

    By DIN  |   Published on : 12th April 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான முதல்கட்ட விசாரணையை சிபிஐ பதிவு செய்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் அமைச்சர் பதவியில் இருந்தபோதே தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ. 4.63 கோடி பண மோசடி செய்ததாக சத்யேந்தர் ஜெயினிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வருமான வரித்துறையினர் பரிந்துரை செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
    இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக முதல்கட்ட விசாரணையை பதிவு செய்துள்ளதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai