சுடச்சுட

  

  தலாக் முறையால் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் பாதிப்பு: மத்திய அரசு

  By DIN  |   Published on : 12th April 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலாக், பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகளால் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் சமூகத்தில் வெகுவாக பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  மூன்று முறை தலாக் கூறிவிட்டு விவாகரத்து கோரும் முத்தலாக் முறை, பலதார மணம், விவாகரத்து செய்த இஸ்லாமியப் பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் "நிக்கா ஹலாலா' உள்ளிட்ட நடைமுறைகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு இஸ்லாமிய மகளிர் அமைப்புகள் சார்பில் கடந்த ஆண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டன.
  இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மேற்குறிப்பிட்ட நடைமுறைகளால் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
  மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், இஸ்லாமியட் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் கருத்து தெரிவித்திருந்தது.
  இதனிடையே, இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமானது என்பதால் இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என நீதிபதிகள் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.
  இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய நடைமுறைகளால் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியமும், அவர்களின் சமூக அந்தஸ்தும் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற முறைகளால் இஸ்லாமிய ஆண்களுக்கு நிகரான சம உரிமை அந்த சமூகத்தின் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.
  இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மதத்தின் பெயரால் இஸ்லாமியப் பெண்களுக்கு மறுக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? முழுக்க முழுக்க ஆணாதிக்க மனப்பான்மையால் உருவாக்கப்பட்ட இந்த நடைமுறைகளுக்கு இஸ்லாமியப் பெண்கள் பலியாகி வருவதை இனியும் அனுமதிக்கக் கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு உறுதிசெய்யும் வாழ்வதற்கான உரிமையையே இந்த நடைமுறைகள் பறிக்கின்றன.
  எனவே, முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய நடைமுறைகளை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். மேலும், பெண்களின் சம உரிமையையும், அவர்களின் மரியாதையையும் சீர்குலைக்க மதம் ஒரு காரணமாக இருக்கலாமா என்பதையும் நீதிமன்றம் விளக்க வேண்டும் என அதில் மத்திய அரசு தெரி
  வித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai