சுடச்சுட

  
  petrol_+_diesel


  சென்னை: சர்வதேச விலைக்கேற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

  • தற்போது இந்தியாவில் சர்வதேச விலைக்கேற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை அதாவது, மாத இறுதி நாளின் நள்ளிரவிலும், இரண்டாது முறை 15ம் தேதி நள்ளிரவிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    
  • இதனை மாற்றி, தங்கம் விலை நிலவரம் போல தினந்தோறும் மாற்றியமைக்க இந்திய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சோதனை அடிப்படையில், முதற் கட்டமாக 5 நகரங்களில், தினமும் நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
    
  • இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களும் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளன.
    
  • இது குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், மத்திய எண்ணெய்த் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், சோதனை அடிப்படையில் இந்தியாவின் 5 நகரங்களில் இந்த திட்டம் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
    
  • இந்தியாவில் புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஜம்ஷெட்பூர், உதைப்பூத், சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டத்தை சோதித்து அதில் ஏற்படும் சாதக, பாதக விஷயங்களை கண்டறிந்து, அதனை சரி செய்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    
  • இந்தியாவில் இயங்கும் 90 சதவீத பெட்ரோல் பங்குகள், மேற்சொன்ன 3 பெட்ரோலிய நிறுவனங்களால்  இயக்கப்படுவதாகும். அந்த வகையி 5 நகரங்களிலும் சுமார் 200 பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்.
    
  • இதுபோல, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றம் செய்வது, சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் கடுமையான போட்டியை சந்திக்கும் வகையில் இந்தியாவுக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.
    
  • உலக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் 4வது பெரியா நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் முழுத் தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெய்யையும், 95 சதவீத எரிவாயுவையும் ஓபெக் நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
    

  மேலும் படிக்க: மே 1 முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai